அரசியல் செய்திகள்

செல்லும் இடமெல்லாம் மக்களின் ஆதரவு தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி உறுதி செய்யப்பட்டதா !கருப்பு முருகானந்தத்திற்கு ?

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார் திரு. கருப்பு முருகானந்தம். அந்த கட்சியில் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் அவர் தற்போது தஞ்சை பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் .

தஞ்சை பகுதிக்கு பிரதமர் திரு. மோடி அவர்களால் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன .குறிப்பாக தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ,மேலும் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் தஞ்சை ரயில் நிலையம் மேம்படுத்தப்படுவது ரூபாய் 150 கோடியில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிறப்பு மருத்துவமனை என அனைத்து திட்டங்களும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் கருப்பு முருகானந்தம் பிரதமர்      திரு. நரேந்திர மோடி மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் அனைத்து திட்டங்களையும் திறம்பட செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தஞ்சை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் திரு. கருப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதியாக இருக்கும் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்  .மேலும் அனைத்து துறை அமைச்சருடன் தொடர்பு இருப்பதால் அனைத்து திட்டங்களையும் தஞ்சை பகுதியில் கொண்டு வர அனைத்து தகுதிகளும் அவருக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் மத்தியிலும் கருப்பு முருகானந்தத்திற்கு நல்ல பெயர் இருப்பதால் இந்த முறை தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

மேலும் பிரச்சாரத்திற்கு வாக்கு சேகரிக்க செல்லும் திரு. கருப்பு முருகானந்தத்திற்கு அனைத்து பகுதிகளிலும் அமோக வரவேற்பு  அளிக்கப்படுவதால் வெற்றி உறுதி செய்ய பட்டது என்கின்றனர் பாஜக தரப்பினர்.  

Related Posts