அரசியல் செய்திகள்

திரு.அண்ணாமலை தொழிலாளர் தின வாழ்த்து.

தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும்,பாஜக தமிழ்நாடு சார்பாக உழைப்பாளர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர்களின் உன்னதத்தையும், உரிமையையும், தியாகத்தையும் குறிக்கும் இந்தச் சிறப்பு மிக்க தினத்தில், அனைவரின் கடும் உழைப்புக்கான பலன்கள் நிறைவாகக் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது நாடு உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை எட்ட வேண்டும் என்ற, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.ரேந்திரமோடி அவர்களின் கனவை நிறைவேற்றத் துணையிருக்கும், ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Posts