இந்திய செய்திகள்

ஏர் இந்தியாவின் புதிய விமானம் விரைவில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வருகிறது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் தற்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் விமானத்தின் உள்ளே பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளிலும் மாற்றம் கொண்டு உள்ளது.

விமான பயணிகளின் வசதிக்காக அதிக அளவில் சொகுசு வழங்கும் விமானமாக கருதப்படும் ஏ350-900 விமானம் தற்போது ஐந்தாவது விமானமாக ஏர் இந்தியா வாங்கியுள்ளது இது விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் புதிய ரக விமானங்கள் உள்நாடு மற்றும் சர்வதேச பயணிகளின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts