அரசியல் செய்திகள்

பாஜக சார்பில் பொங்கல் விழா மாநில பொதுச் செயலாளர் பங்கேற்பு.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி ஒன்றிய பாஜக சார்பில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொது செயலாளர் திரு .கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார் .மேலும் பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் பாஜக தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் .

நடைபெற்ற நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டனர் .

நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட மேலிட பார்வையாளர் திரு.பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் திரு.ராகவன் , திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர்   வடபாதி திரு.M.R. பூபதி, மாவட்ட செயலாளர் திரு.தோலி செல்வம், மாவட்ட OBC அணி துணைத் தலைவர் திரு.மாரி பிரபு, OBC மாவட்ட செயலாளர் திரு.ராஜீவ் காந்தி, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் திரு.சாமி கார்த்தி, நகரத் துணைத் தலைவர் திரு.வசந்த், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சிக்குப் பின் பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பாஜக தலைவர் எம். ஆர். பூபதி நன்றியினை தெரிவித்தார் .

Related Posts