நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அளிக்கப்பட உள்ளன ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடு வேட்பாளர் அறிவிப்பு பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் கட்சிகள் ஆர்வம் கட்டி வருகின்றனர் .
இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டதால் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் பறிபோனது .
செய்தியாளர் :R.ராஜேஷ் குமார்