சினிமா செய்திகள்

GOAT படத்தில் CSK வீரர்கள் !அசத்தல் அப்டேட்.

தளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா சினேகா, மோகன் ,ஜெயராம் பலரும் நடித்து வருகின்றனர் .

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது GOAT திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் நடிகர் அஜஜ்மல் இந்த படம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் சிஎஸ்கே அணியில் விளையாடும் மூன்று வீரர்கள் கோட் திரைப்படத்தின் நடித்துள்ளதாக கேள்விப்பட்டோம் அது உண்மையாய் என கேள்வி எழுப்பினார்கள்? இதற்கு அதை என்னால் கூற முடியாது தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தான் கூற வேண்டும் என சொல்லி முடித்து விட்டார் .

அவர் அப்படி ஏதும் இல்லை என்று கூறாமல் அதற்கான பதிலை நான் சொல்ல முடியாது எனக் கூறியதால் சிஎஸ்கே வீரர்கள் விஜய்யின் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் என தற்போது விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .

Related Posts