அரசியல் செய்திகள்

டெல்லி செல்லும் அண்ணாமலை 20 இடங்களில் பாஜக போட்டி!

பாஜக தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிட போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவின் வேட்பாளர் பட்டியல் உடன் இன்று மாலை டெல்லி செல்கிறார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவராக

திரு. அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கட்சி மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர் .இந்த நிலையில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அது தொடர்பாக பாஜக வேட்பாளர் பட்டியல் உடன் இன்று மாலை விமான மூலம் பாஜக மாநில தலைவர் திரு .அண்ணாமலை டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது .

குறிப்பாக தமிழகத்தின் பாராளுமன்ற தேர்தலில் கோவை, கன்னியாகுமரி, விருதுநகர், தென் சென்னை ஆகிய பகுதிகள் அதிக வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளாக தற்போது ஊடகவியலாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .குறிப்பாக தஞ்சை மற்றும் ராமநாதபுரங்களில் வெற்றி வாய்ப்புக்கான அனைத்து செயல்பாடுகளிலும் பாஜகவினர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தென்காசி பகுதியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts