சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரை அலங்கரிக்க போகும் புதிய SMRT ரயில்கள்

நீங்கள் வடக்கு-தெற்கு அல்லது கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் அடிக்கடி பயணிப்பவர் என்றால் , இந்த செய்தி உங்களுக்கானது.

புதிய SMRT ரயில்களில் மெல்லிய தோற்றம், பெரிய ஜன்னல்கள் மற்றும் (பெர்ச் )சிறப்பு இருக்கைகள் உள்ளன.புதிய ரயில்கள் விரைவில் பாதைகளை அலங்கரிக்க உள்ளன.

ஜூன் 4 முதல் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைகளில் ரயில்கள் பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்குப் பாதைகளுக்கான (NSEWL) புதிய ரயில்கள் ஜூன் 4, 2023 முதல் படிப்படியாக பயணிகள் சேவையில் நுழையும்.

இயக்கப்படவிருக்கும் புதிய ரயில்கள் பல சிறப்பு அம்சங்களை கொண்டதாக உள்ளது. தற்போது சிவப்பு மற்றும் பச்சை கோடுகளில் இயக்கப்படும் ரயில்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

ரயில்களில் செல்லும்போது வெளிப்புறத் தோற்றத்தை காண்பதற்கு மிகப் பெரிய நீளமான ஜன்னல்களை இந்த ரயில்களில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

புதிய ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் பொருட்களை வைப்பதற்கான அகண்ட இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் SMRT ரயில்களில் தற்போது இந்த புதிய ரயில்கள் மேம்படுத்தப்பட்ட வசதிகள் மட்டுமல்லாமல் மேலும் சிங்கப்பூர் ரயில் போக்குவரத்து துறையில் ஒரு புதிய அங்கமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts