டிசம்பர் 31ம் தேதி இரவு உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி அனைத்து நாடுகளிலும் வானவெடிகள் நடைபெறுவது வழக்கம். இருப்பினும் சிங்கப்பூரில் புத்தாண்டு வானவேடிக்கை என்பது சற்று சிறப்பானதாக அமையும் .
சிங்கப்பூரில் நடைபெறும் புத்தாண்டு வானவேடிக்கையினை காண வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டுவர்.
2024 ஆம் ஆண்டை வரவேற்கும் வாணவேடிக்கை நடைபெறும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வாவேடிக்கையினை கண்டு ரசிக்கலாம் .
1.பூன் லே (பிளோக் 215 பூன் லே பிலேஸ்)
2.மார்சிலிங் உட்லண்ட்ஸ் விளையாட்டு அரங்கம்
2.நீ சூன் யூஷுனில் உள்ள FutsalArena
3.கியெட் ஹொங் கியெட் ஹொங் ஸ்கொயர்
4.மெக்பர்ன்
5.மெரீன் பரேட் பிளோக் 46 மரீன் பரேட் கிரசண்ட்.