சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் மிகவும் சிரமமான வேலையை எதிர்நோக்கும் ஊழியருக்கு பரிசு $1000 வெள்ளி!

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான யூனிவர்சல் ஒவ்வொரு வருடமும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் மிகவும் கடினமான வேலையை எதிர்நோக்கி வரும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்குகிறது.

2024 ஆம் ஆண்டிற்கான ஒரு மாத சம்பளத்திற்கான பரிசை தற்போது அறிவித்துள்ளது. ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த .திரு.செல்வராஜ் அவர்களுக்கு அந்த பரிசினை சிங்கப்பூர் யூனிவர்சல் நிறுவனத்தின் நிறுவனர் SPR.சுதன் வழங்கி உள்ளார். சிங்கப்பூரில் மிகவும் கடினமான வேலையை திரு.செல்வராஜ் எதிர்நோக்குவதாகவும் கைகளில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த காணொளி காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த இரண்டு வருடங்களாக இதுபோன்று சிங்கப்பூரில் கடினமான வேலையை எதிர்நோக்கும் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கி வருகிறது .சிங்கப்பூர் யூனிவர்சல் நிறுவனம் மேலும் எங்களைப் போன்று பல்வேறு நிறுவனங்களும் இதுபோன்று தொழிலாளர் தினத்தில் ஒவ்வொரு வருடமும் கடினமான வேலையை எதிர்நோக்கும் ஊழியர்களுக்கு 1 மாத ஊதியத்தை வழங்குமாறு அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் .

மூன்றாவது வருடமாக இந்த வருடம் ஒரத்தநாட்டை சேர்ந்த திரு. செல்வராஜ் க்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கி உள்ளது யுனிவர்சல் நிறுவனம். ஜனவரி மாதம் 920 வெள்ளி ஊதியம் பெற்றுள்ளார் திரு. செல்வராஜ் சிங்கப்பூர் யூனிவர்சில் நிறுவனம் ஆயிரம் வெள்ளி அவருக்கு வழங்கி அவரை பாராட்டி உள்ளது .

வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click to watch the video

Related Posts