தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக கருதப்படும் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமானவர் பாலா.
திரை உலகில் மட்டுமல்லாமல் தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு சமூக சேவைகளை செய்வதன் மூலம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளார் பாலா .
சிங்கப்பூரில் உள்ள AZ டிஜிட்டல் என்ற செல்போன் கடைக்கு வருகை தந்தார் திரு. பாலா வருகை தந்த பாலாவிற்கு அங்குள்ள சிங்கப்பூரில் உள்ள தமிழ் மக்கள் பெருமளவில் வரவேற்பை வழங்கி உள்ளனர். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தமிழகத்தை போல சிங்கப்பூரும் மிகவும் பண்பாடு நாகரிகங்களில் சிறந்து விளங்குவதாகவும் விஜய் டிவியின் பிரபலம் பாலா தெரிவித்தார் .