தைப்பூசம் இந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் தைப்பூசம் நடைபெறுவது வழக்கம் தமிழகத்தில் கொண்டாடப்படும் அதே உற்சாகத்தோடு பல்வேறு பகுதிகளில் இந்த ஆன்மீக நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
தைப்பூசம் குறிப்பாக இந்தியா சிங்கப்பூர் மலேசியா இலங்கை கனடா லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெறுகிறது .
சிங்கப்பூரில் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்காக பக்தர்கள் தற்போதே மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர் .
மேலும் சிங்கப்பூர் சிராங்கூன் சாலைகளில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடைபெற்றுவருகிறது.
மேலும் சிங்கப்பூர் தைப்பூசம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தை பார்க்கவும் .