சிங்கப்பூர் செய்திகள்

நேற்று லிட்டில் இந்தியா பகுதியில் கூட்டம் குறைவாக காணப்பட்டது !

சிங்கப்பூரில் உள்ள முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்றுதான் லிட்டில் இந்தியா. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் வாரம் தோறும் வார இறுதி நாட்களில் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து அதிகமாக இருக்கும்.

30-10-2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாட்களில் லிட்டில் இந்தியா பகுதிகளில் கூட்ட நெரிசல் குறைவாகவே காணப்பட்டது கடந்த வாரம் மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலானவர்கள் கடந்த வாரமே தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க மற்றும் பண்டிகைகளை கொண்டாட லிட்டில் இந்தியா வந்து சென்றுள்ளனர் .

கடந்த வார விடுமுறை தினங்களை லிட்டில் இந்தியாவில் கழித்ததால் இந்த வாரம் கூட்ட நெரிசல் குறைவாக காணப்பட்டதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பகல் மற்றும் இரவு வேலைகளில் கூட கூட்ட நெரிசல் குறைவாகவே லிட்டில் இந்தியா அதாவது தேக்கா பகுதியில் காணப்பட்டது.

Related Posts