சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் கட்டிட விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியரின் உடல் தமிழ்நாட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது .

ஜூன் 15ஆம் தேதி தஞ்சம் பகார் பகுதியில் கட்டிட விபத்து ஒன்றில் உயிரிழந்தார் .திருப்பத்தூர் அருகே உள்ள நாட்றம்பள்ளியை சேர்ந்த திரு. வினோத்குமார் .

20 வயது இளையவரான திரு. வினோத்குமார் பல கனவுகளோடு சிங்கப்பூருக்கு வருகை தந்தார். எதிர்பாராத விபத்தில் சிக்கி தற்போது உயிரிழந்துள்ளது. சிங்கப்பூரில் அவரோடு பணிபுரிந்து வந்த அவரது உறவினர்கள் நண்பர்கள் மட்டும் அல்லாமல் அவரின் சொந்த ஊரான நாட்றம் பள்ளி கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

திரு. வினோத்குமார் அவர்களின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊருக்கு விமான மூலம் சனிக்கிழமை ஜூன் 17ஆம் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் அருகே உள்ள நாட்றம் பள்ளிக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது .

Related Posts