இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் நேற்று விறுவிறுப்புடன் நடைபெற்றது ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்களுக்கு எளிதான முறையில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வெளிநாடுகளில் வசித்து வரும் இந்திய குடிமக்கள் பெரும்பாலோனார் நேற்று இந்தியா வருகை தந்து 2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் வாக்களிப்பதற்கான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு ஆண்டுகளாக இருந்து வருகிறது இதற்கான நடவடிக்கைகளும் அதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
குறைந்தபட்சமாக 90 சதவீத வாக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களே தமிழகத்தில் வாக்களித்துள்ளனர் .ஆனால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருகை தந்து வாக்களித்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள்


