சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் துவக்கம்.

உலகம் முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக அதற்கான பொருட்கள் மற்றும் பலகாரங்கள் வாங்குவதற்காக லிட்டில் இந்தியா பகுதியில் சிறப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் பேருந்துகளிலும் தீபாவளி வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்ட வாசகங்களுடன் பேருந்துகள் சிங்கப்பூரை வலம் வருகின்றன.

தமிழக திரைத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் தீபாவளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக சிங்கப்பூருக்கு வந்துள்ளனர் .

லிட்டில் இந்தியா முழுவதும் தற்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீபாவளி தோரணங்கள் சிங்கப்பூருக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் இனிப்புகள் புத்தாடைகள் லிட்டில் இந்தியா பகுதி வர்த்தகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன. சிங்கப்பூர் தற்போது தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts