சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் மதுரைக்கும் அதிக விமானங்களை இயக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் இந்திய மத்திய அரசிற்கு கடிதம் .

சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருவதாகவும், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் தமிழர்கள் உள்ளதையும், சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூருக்கும், சென்னைக்கும். திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே விமானச் சேவை உள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை சிங்கப்பூர் அரசின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.கே.சண்முகம் அவர்கள் தன்னைச் சந்தித்தபோது எழுப்பியதாகவும், இதேபோன்ற கோரிக்கையை சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் பலரும் முன்வைத்ததாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு, சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையில் அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சாதகமாக பரிசீலித்திட இந்திய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts