தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் அதே உற்சாகத்துடன் பல்வேறு உலக நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கம்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் தீபாவளி என்பது ஒரு பெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலை முழுவதும் வண்ண விளக்கு தோரணங்கள் ஒவ்வொரு வருடமும் அமைக்கப்படும். இந்த 2022 வருடத்திற்கான வண்ண விளக்கு தோரணங்கள் அமைக்கும் பணி நேற்று இரவு முதல் துவங்கியுள்ளது .

தற்போது அமைக்கப்பட்டு வரும் வண்ண விளக்கு தோரணங்களில் வீணை, மேளம் மற்றும் நடனம் ஆடும் கலைஞர்கள் போன்ற வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது .

லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலை முழுவதும் வண்ண விளக்கு தோரணங்கள் அமைக்கப்பட்டு விரைவில் தீபாவளிக்கான ஒளியூட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .
