தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம் அவர்கள் தமிழக அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் .
இன்று சிங்கப்பூரில் ஏழாவது உலக சுகாதார மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் .
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் உயரதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்களை சந்தித்தார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் .
மேலும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார்.
இன்று மாலை சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் சிங்கப்பூர் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்களையும் சந்தித்து உரையாற்றினார்.