சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வோங் பதவி ஏற்றார் .சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த திரு.லீசியன் லூங் அவர்கள் பதவி விகிய நிலையில் துணை பிரதமராக இருந்த லாரன்ஸ்வோங் பதவி ஏற்றுக்கொண்டார் .
51 வயதான லாரன்ஸ் சிங்கப்பூரின் பிரதமராகவும் நிதி மந்திரி ஆகவும் பதவி வகிக்க உள்ளார்.
திரு. லாரன்ஸ் அவர்களுக்கு 15-5-2024 சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முக ரத்தினம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிங்கப்பூரில் திட்டமிடப்பட்ட அரசியல் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த பதவி பிரமாணம் கருதப்படுகிறது .
சிங்கப்பூரின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள திரு. லாரன்ஸ்வோங் அவர்களுக்கு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .