சிங்கப்பூர் செய்திகள்

தமிழ்நாட்டின் பிரபல சொல்லிசை கலைஞர் ராவணா ராம் சிங்கப்பூரில்-அம்புட்டுதேன்

கடந்த வாரம் தமிழ்நாட்டின் பிரபல சொல்லிசை கலைஞரான ராவணா ராம் சிங்கப்பூரில் உள்ள பிரபல செல்போன் கடையில் சிங்கப்பூர் தமிழர்களுக்காக பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் .

சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள AZ மொபைல்ஸ் என்ற கடையில் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் உரையாடினார் .மேலும் தனது சொந்த ஊரான மதுரையை சேர்ந்த நண்பர்களுடனும் அவர் உரையாடினார் .

சொல்லிசை கலைஞர் ராவணா ராம் தமிழ்நாட்டின் சமூக வலைதள பக்கங்களாக கருதக்கூடிய முகநூல் இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தளங்களில் மிகவும் பிரபலமானவர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராகவும் அவர் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

தான் சிங்கப்பூர் வருகை தந்தது சிங்கப்பூர் தமிழ் மக்களுடன் கலந்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் .சிங்கப்பூர் வெளிநாட்டை போன்று ஒரு உணர்வு இல்லாமல் தமிழர் கலாச்சாரத்தோடு ஒன்றி இருப்பதாகவும் சொல்லிசை கலைஞர் ராவணா ராம் தெரிவித்துள்ளார் .

Related Posts