சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் சம்பாதித்து நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்ட தமிழருக்கு அடித்தது  அதிர்ஷ்ட பரிசு !

தமிழ்நாட்டைச் சேர்ந்த கனரக வாகன இயக்குனரான திரு. ஆறுமுகம் அவர்களுக்கு பொலிசம் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் நடத்திய GO BIG OR GO HOMe விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதற்காக திரு .ஆறுமுகம் அவர்களுக்கு சிங்கப்பூர் வெள்ளி 18,888 பரிசுத் தொகையை வழங்கி உள்ளது.

பரிசு தொகைக்காண போட்டியானது மே 27 ஆம் தேதி நடைபெற்றுள்ளது . பரிசினை பெற்ற திரு. ஆறுமுகம் அவர்கள் சிங்கப்பூரில் தான் ஈட்டும் பணத்தின் மூலம் நிலம் வாங்கி வீடு கட்ட முயற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற போட்டியில் நிறுவனத்தின் சார்பில் 210 பேர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

திரு. ஆறுமுகம் மட்டுமே மொத்த குடும்பத்திற்கும் வருமானத்தை ஈட்டி தருபவராக இருந்து வருகிறார். அவரது மூத்த சகோதரர்கள் இயற்கைஎய்துவிட்டதால் அவர்களின் குடும்பத்தையும் சேர்த்து தற்போது கவனித்து வருகிறார் .

Related Posts