சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இந்திய தூதரகம் அழைப்பு ..

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் இந்திய தூதரகம் இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலுள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது .

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் கொண்டாடப்பட உள்ளது .

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாரதப் பிரதமர் இந்திய தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்திய குடியரசுத் தலைவர் உரையினை வாசிப்பார் சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரி .

Related Posts