சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பல்வேறு கதாபாத்திரங்களில் டிக் டாக்கில் தோன்றும் இவர் யார்?

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான சமூக ஊடகமாகவும் மிக முக்கியமான சமூக ஊடகமாகவும் திகழ்ந்து வருவது டிக் டாக். திறமையை வெளிக்காட்டுவதற்கும் சமூக சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கும் சமூக வலைதளங்கள் மிகவும் பெரு உதவியாக இருந்து வருகின்றன. தொழில் முனைவோர் மட்டுமல்லாமல் தொழில் அதிபர்களும் தற்போது சிங்கப்பூரில் டிக் டாக் என்ற சமூக வலைதளத்தை மிகவும் நம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

சமீப காலங்களில் அதாவது 2024 தொடக்கத்திலிருந்து இந்த நபர் மிகவும் பிரபலம் அதாவது சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதிகள் செயல்பட்டு வரும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனம்தான் 122 செராங்கூன் ரோடு யுனிவர்சல் இந்த நிறுவனத்தின் டிக் டாக் அதாவது அதிகாரப்பூர்வ டிக் டாக் தளத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர் யார்?

டிக் டாக்கில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் பாவனைகள் மூலம் அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்து உள்ளார் இவர்.அவர் பெயர் தான் கார்த்திக் அதாவது கார்கவயல் கார்த்திக் என்பது இவருடைய பெயராகும் .தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் திரு. கார்த்திக் இவர் வலசை வரும் பறவைகள் பற்றிய ஆராய்ச்சி படிப்பில் முதுகலை அதாவது முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. கார்த்திக் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஊடகங்களில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது யூனிவர்சல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த பிறகு தன்னுடைய தனி திறமையை வெளிப்படுத்தி வருகிறார். யூனிவர்சல் நிறுவனத்தின் அனைத்து விளம்பர காணொளி காட்சிகளுக்கான விளம்பர காணொளிகளில் இடம்பெறும் கதாபாத்திரங்களை தானே வடிவமைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நகைச்சுவையின் மூலம் மக்களை கவர்வது எனக்கு விருப்பம் என்றும் தனது தனி திறமைகளை வெளிப்படுத்த யூனிவர்சல் நிறுவனத்தின் டிக் டாக் தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் தான் பணிபுரியும் இடத்தில் முழு சுதந்திரத்துடனும் தான் செயல்படுவதாக திரு. கார்த்தி தெரிவித்துள்ளார்   மேலும் தமிழ்நாட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் விரைவில் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது ஒருவர் பணிபுரியும் இடம் என்பது சுதந்திரமாகவும் அதே அளவில் மன நிம்மதி அளிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் அதுததான் சிறந்த பணியாளர்களுக்கான அங்கீகாரம் என்று அவர் கூறினார். அந்த அங்கீகாரத்தை தனக்கு யுனிவர்சல் நிறுவனம் வழங்குவதாகும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Posts