சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ -வெளிநாட்டு ஊழியர்களின் ஹீரோ!

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ நினைவு தினம் இன்று .16ஆம் தேதி செப்டம்பர் 1923 ஆம் ஆண்டு பிறந்த இவர் 23 மார்ச் மாதம் 2015 அகவை 91ல்  இயற்கையை எய்தினார்

சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் இவர்.சிங்கப்பூரின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் இவர்.

பொருளாதாரம் உயர்வு உள்கட்டமைப்பு வசதிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் முதன்மை வகிக்கிறது. மேலே குறிப்பிட்ட அனைத்து செயல்பாடுகளும் தனது கடின உழைப்பால் இன்று நமக்கு வழங்கி உள்ளார் சிங்கப்பூரின் தந்தை திரு.லீகுவான் யூ அவர்கள்.

இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுவதற்கு முதன்மை காரணம் இவர். கடந்த ஆண்டு தமிழக முதல்வர் திரு முக. ஸ்டாலின் சிங்கப்பூர் சென்ற பொழுது சிங்கப்பூரின் தந்தை லீகுவான் யூ அவர்களுக்கு மன்னார்குடியில் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

சிங்கப்பூரில் பணியாற்றி வரும் வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது வரை இவரை ஒரு தெய்வமாக வணங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் :R.ராஜேஷ்குமார்

Related Posts