கேரளாவில் தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் போட்டியிடும் கோவை தொகுதி உட்பட மாநில முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .
நேற்றைய தினம் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமாருக்கு வாக்கு சேகரித்தார்.
அவருக்கு கேரள மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்த வருகின்றனர். கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் போதெல்லாம் பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு அதிரடியான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .