இந்திய செய்திகள்

சிங்கப்பூர் கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர் -சோகத்தில் கிராமம் .

சிங்கப்பூர் தஞ்சம்பகார் பகுதியில் கட்டிட விபத்து ஒன்றில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் உயிரிழந்துள்ளது அவரின் சொந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானத்துறையில் பணி புரிவதற்காக சிங்கப்பூர் வந்துள்ளார் திரு. வினோத்குமார் வயது 20. இவர் தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டறம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் .

திரு. வினோத்குமாரின் பெற்றோர்கள் தின கூலிகளாக பணியாற்றி வருவதாக தெரிய வருகிறது. மேலும் இவர் பட்டையை படிப்பு படித்து முடித்தவர் என்பதும் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது .

ஜூன் 15ஆம் தேதி தஞ்சம்பகார் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார் திரு. வினோத்குமார். திரு .வினோத்குமாருக்கு தம்பி ஒருவர் தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இடிக்கப்பட்டு கொண்டிருந்த கட்டிடம் விபத்துக்குள்ளான போது 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர் .ஆனால் சுவர் ஒன்று திரு.வினோத்குமாரின் மேலே விழுந்ததால் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் .

இடிக்கப்பட்டு கொண்டிருந்த கட்டிடத்தில் விபத்து ஏற்பட்டவுடன் சிங்கப்பூரின் குடிமை தற்காப்பு படை அந்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டது. மீட்பு பணியின் போது 20க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் திரு. வினோத்குமார் காணவில்லை .சுமார் ஆறு மணி நேர தேடலுக்குப் பிறகு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் திரு .வினோத்குமாரின் உடலை மீட்டனர் .

திரு. வினோத்குமார் இறப்பு அவருடன் சிங்கப்பூரில் பணியாற்றிய நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் அவரின் சொந்த ஊரிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Related Posts