சிங்கப்பூர் செய்திகள்

தனது காரை ட்ராபிக் சிக்னலில் நிறுத்தி கீழே இறங்கி உதவிய சிங்கப்பூர் மனிதநேயமிக்க நபர்! வைரல் வீடியோ

சிங்கப்பூரில் நபர் ஒருவர் டிராபிக் சிக்னலில் தனது காரை நிறுத்திவிட்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சாலையை கடக்க உதவி செய்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த மனிதநேயமிக்க செயலை சிங்கப்பூரில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

முகநூல் இன்ஸ்டாகிராம் டிக் டாக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோவை வைரலாகி வரும் நிலையில் இந்த மனிதநேயமிக்க செயலில் ஈடுபட்டவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. சமூக வலைதளவாசிகள் தரப்பினரும் இந்த நபருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தது மட்டுமில்லாமல் மனிதநேயம் இன்றும் இந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறது என்று பின்னூட்டம் இட்டு வருவது குறிப்பிடத்தக்கது ,

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைரல் ஆகி வரும் இந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சுற்றுப்புற சூழ்நிலைகளை பார்க்கும் போது சிங்கப்பூர் என்பது மட்டும் உறுதியாக தெரிய வருகிறது.

https://fb.watch/kXVPv_T0OI/?mibextid=Nif5oz

Related Posts