சிங்கப்பூர் செய்திகள்

பண்டிகைகளுக்கு தயாராகும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா!

சிங்கப்பூர் அனைத்து பண்டிகைகளையும் தமிழகத்தில் கொண்டாடப்படும் அதே உற்சாகத்தோடு சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பொங்கல் பண்டிகை என்றாலே சிங்கப்பூர் வாசிகளுக்கு மகிழ்ச்சிதான் .

தீபாவளி பண்டிகை என்றதுமே சிங்கப்பூரில் மிக முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுவது சிங்கப்பூர் லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலையில் அமைக்கப்படும் வண்ண விளக்குகளான தோரணங்கள் .

சிங்கப்பூர் தேக்கா பகுதி அதாவது லிட்டில் இந்தியா தமிழர்கள் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் குறிப்பாக இனிப்புகள் மற்றும் மத்தாப்புகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் பகுதி .

சிராங்கூன் சாலையில் தற்போது வண்ண விளக்கு தோரணங்கள் அமைக்கப்பட்டு ஒளி ஊட்டுக்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் இனிப்புகளை விற்பனை செய்யும் கடைகளும் தற்போது தயார் நிலையில் இனிப்புகளை தயார் செய்து வைத்துள்ளனர் .

நவராத்திரி விழாவுக்கு தேவையான கொலு பொம்மைகளும் தற்போது சிங்கப்பூரில் விற்பனைக்கு தயாராகி உள்ளன. வருங்கால பண்டிகைக்காக சிங்கப்பூர் முழுவதுமாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts