சிங்கப்பூர் பொருளாதார உட்கட்டமைப்பு வசதி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
சிங்கப்பூரை பொறுத்தவரையில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாடு, மியான்மார் இந்தோனேசியா, மலேசியா, பங்களாதேஷ் நாடுகளில் இருந்து ஊழியர்கள் சிங்கப்பூர் வருகை தந்து பணியாற்றி வருகின்றனர்.
சிங்கப்பூரின் தேக்கா லிட்டில் இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் மொபைல் நிறுவனம் ஒன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முகநூல் காணொளி காட்சி வழியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
சிங்கப்பூரில் பணிபுரியும் பணியாளர்களின் யாரினுடைய வேலை மிகவும் கடினமாக இருக்கிறது என்று பின்னூட்டம் (comment)இடவேண்டும் என்று அந்த காணொளியில் சொல்லப்பட்டுள்ளது .மிகவும் கடினமான வேலையை யார் செய்கிறார்களோ அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என அந்த முகநூல் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.