சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் சுலபமாக இனி நம்ம ஊரு இந்திய பொருட்களை வாங்கலாம் இந்திய தூதரகத்தின் அசத்தல் செயல்பாடு !

இந்தியாவின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் தற்போது சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ளது .

இந்தியாவின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் இந்தியாவின் உணவு பதப்படுத்தப்படும் தொழில்துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது .

இந்தியாவில் உள்ள மாவட்டங்கள் அதன் தொழில் வளர்ச்சியை அடையவும். மாவட்டங்களின் குறிப்பிடத்தக்க பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அதனை சிறந்த தரத்துடன் தயார் செய்து விற்பனை செய்யவும் இந்த திட்டம் வழிவகுக்கிறது.

சிங்கப்பூரின் பிரபல பல்பொருள் அங்காடியான முஸ்தபா சென்டர் வணிக வளாகத்தில் தற்போது ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் பொருட்கள் விற்பனை பகுதியை இந்திய தூதரக உயர் அதிகாரி திரு. பெரியசாமி குமரன் அவர்களும் முஸ்தபா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. முஸ்தாக் அகமது அவர்களும் திறந்து வைத்தனர் .

ODOP மூலம் அதாவது ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மூலம் இந்தியாவின் சிறந்த பொருட்களை நிறைந்த தரத்துடன் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்லலாம் இந்த பொருட்கள் அனைத்தும் தற்போது முஸ்தபா சென்டர் வணிக வளாகத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts