சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலின் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காலை 9:15 மணியளவில் கும்பத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சட்ட உள்துறை அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் .மற்றும் கலாச்சார சமூக இளைஞர் நலத்துறை அமைச்சர் எட்வின் தோங் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related Posts