சிங்கப்பூர் செய்திகள்

தித்திக்கும் தீபாவளியை வரவேற்கும் சிங்கப்பூர்.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் குறிப்பாக இந்தியர் வசிக்கும் நாடுகளில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்தியா உட்பட குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா ,இலங்கை கனடா ஆகிய நாடுகளில் தீபாவளி இந்தியாவில் கொண்டாடப்படும் அதே உற்சாகத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.

சிங்கப்பூரை பொறுத்தவரை தீபாவளி பண்டிகை என்றால் சற்று உற்சாகம் அதிகம் தான். குறிப்பாக சிங்கப்பூர் சிராங்கூன் சாலைகளில் தீபாவளிக்கான வாழ்த்து அலங்கார வண்ண தோரணங்கள் அமைத்தல் .

Advertisement

தீபாவளிக்கான சிறப்பு சந்தைகள் அதாவது தீபாவளி பஜார் அமைத்தல்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல் என சிங்கப்பூர் தீபாவளியை சற்று அதிக உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி வருகிறது.

சிங்கப்பூரில் பணியாற்றும் பெரும்பாலான தமிழக ஊழியர்கள் தமிழ்நாட்டிற்கு தீபாவளி பண்டிகைக்காக ஊர் திரும்புவதற்கான பூர்வாங்க பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts