சிங்கப்பூர் செய்திகள்

தீபாவளி களைகட்டும் வெளிநாட்டு ஊழியர்களின் சொர்க்கபூமி லிட்டில் இந்தியா -தேக்கா

சிங்கப்பூரின் முதன்மையான வர்த்தக பகுதிகளில் குறிப்பிடும்படியான பகுதிதான் தேக்கா என்று அழைக்கப்படும் லிட்டில் இந்தியா .

லிட்டில் இந்தியா பகுதி களில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடம் மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களை சந்திக்க ஏதுவாக அமையும் இடம் லிட்டில் இந்தியா தான் .

தீபாவளி பண்டிகை வருவதை யொட்டி வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் அல்லாமல் சிங்கப்பூரர்களும் தங்களுக்கு தேவையான தீபாவளிக்கு தேவைப்படும் பொருட்களாக கருதப்படும் இனிப்பு வகைகள் மத்தாப்புகள் உடைகள் என அனைத்தையும் வாங்க வீட்டில் இந்தியா வருகின்றனர் .

தற்போது தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ள இனிப்புவகைகள் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் மலேசியா தாய்லாந்து இந்தியா ஆகிய பகுதிகளில் இருந்து புத்தம் புதிய ஆடைகளும் லிட்டில் இந்தியா பகுதிக்கு வருகை தந்துள்ளன .

சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என அனைவரும் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு லிட்டில் இந்தியா வந்து செல்வதால் லிட்டில் இந்தியா தற்போது களைகட்டியுள்ளது. வண்ண விளக்குகளால் ஆன அலங்கார தோரணங்கள் உடன் தீபாவளி வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்ட பேருந்துகள் ரயில்கள் என லிட்டில் இந்தியா பகுதியி தற்போது களைகட்டி உள்ளது .

Related Posts