சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் தைப்பூசம் தொடர்பான முழு விவரங்களை எங்கே எப்படி தெரிந்து கொள்வது?

தைப்பூசம் உலகம் முழுவதும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா கனடா லண்டன் மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட உள்ளது .

சிங்கப்பூரில் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவானது கொண்டாடப்படவுள்ளது .இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் காவடிகள் எடுக்கும் பக்தர்கள் சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து பாதயாத்திரை ஆக புறப்பட்டு டேங்க் ரோடு பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் செல்வது வழக்கம்.

முக்கியமாக தைப்பூச தினத்தன்று இரவு 11 மணிக்குள் பக்தர்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலுக்கு சென்று விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான தைப்பூசம் தொடரர்பான அனைத்து விவரங்களையும் இங்கே வழங்கப்பட்டுள்ள இணையதளத்தில் காணலாம் .https://thaipusam.sg

Related Posts