சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சென்ற சுற்றுலா.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Its Raining Rain Coats தன்னார்வ அமைப்பு சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது .

சிங்கப்பூர் மாண்டாய் பகுதியில் இருக்கும் மிருகக்காட்சி சாலைக்கு அந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர் .

வெளிநாட்டு ஊழியர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பல்வேறு தன்னார்வலர்கள் உதவி செய்தனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சுற்றுலா சென்ற சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த சுற்றுலா மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் .புதிய நண்பர்களை சந்திப்பதற்கு வாய்ப்பாக அமைந்ததாகவும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts