சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் வருகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் பின்னணி பாடகர் யுவன் சங்கர் ராஜா சிங்கப்பூர் வருகை தருகிறார்.

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து பாடல்களையும் பாடியுள்ளார் .

யுவன் சங்கர் ராஜா தனது 16 வது வயதில் அரவிந்தன் என்ற தமிழ் திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக தமிழ் திரை உலகத்தில் அறிமுகமானார்.

Advertisement

பல்வேறு விருதுகளைப் பெற்று இன்றுவரை தமிழ் திரைப்பட பாடல்கள் மற்றும் இசையின் விருப்பமான இசையமைப்பாளராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுகிறது .

சிங்கப்பூரில் நடைபெறும் யுவன் சங்கர் ராஜா நேரடி இசை நிகழ்ச்சிக்காக அக்டோபர் மாதம் வருகை தருகிறார் பிரபல இசையமைப்பாரும் பாடகருமான யுவன் சங்கர் ராஜா.

Related Posts