அக்டோபர் 24ஆம் தேதி வருகிற திங்கள்கிழமை உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்கள் என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் அலங்கரிக்கப்பட்டு உள்ள வண்ணத் தோரணங்களின் புகைப்படம் .
சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் தமிழில் தீபாவளி வாழ்த்து பலகைகளும் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரின் பேருந்துகள் மற்றும் ரயில்களிலும் தீபாவளி வாழ்த்துக்கள் இடம்பெற்றுள்ளன சிங்கப்பூரில் முக்கிய வர்த்தக பகுதியாக கருதப்படும் லிட்டில் இந்தியா பகுதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் திரண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.