சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழக முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சி -சிங்கப்பூர் அமைச்சர் கலந்து கொள்கிறார் !

தமிழ்நாட்டில் ஜனவரி 2024 ஆம் ஆண்டு நடைபெறும் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுக்க அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வருகை தருகிறார் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள். மே23 சிங்கப்பூர் வருகை தருகிறார் .

சிங்கப்பூர் வருகை தரும் தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களை சந்திக்கிறார் சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் திரு. K.சண்முகம் அவர்கள்.

தமிழக முதல்வர் மற்றும் சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கலந்து கொள்ளுகின்ற நிகழ்ச்சியானது. மே24 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சிங்கப்பூர் சன்டெக் சிட்டி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது.

நடைபெறும் இந்த நிகழ்ச்சியினை சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் .

இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ்களுடன் செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts