இந்திய செய்திகள்

கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்கும் ரோட்டரி சங்கம் திருத்துறைப்பூண்டி டெல்டா!

ஏப்ரல் 22 :திருத்துறைப்பூண்டியில் கோடைக்காலம் முழுவதும் நீர் மோர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது ரோட்டரி சங்கம் திருத்துறைப்பூண்டி டெல்டா .

திருத்துறைப்பூண்டியில் செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கம் டெல்டா பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது.

கல்வி,மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை, ரத்த தானம், ஏழை எளியோருக்கான உதவிகளை வழங்குவதென அனைத்து துறைகளிலும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் ரோட்டரி சங்கம் டெல்டாவினர் .

தற்போது திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை அருகே ரோட்டரி சங்கம் டெல்டா சார்பில் கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலில் வாடி  வரும் மக்கள் பயனடைகின்றனர்.

தற்போது வரை 22 நாட்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டுள்ளதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர் .

Related Posts