இந்திய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் பிரம்மாண்ட கார் பார்க்கிங்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் கார்களை பார்க் செய்யும் வசதியில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றுதான் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மலேசியா தோகா துபாய் போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது .

தற்போது ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் அதாவது 2023 ஆம் வருடம் விரிவாக்க பணிகள் நிறைவடைந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரம்மாண்ட கார் பார்க்கிங் வசதியுள்ள விரிவாக்க பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Posts