இந்திய செய்திகள்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள திருச்சி புதிய விமான நிலைய கட்டுமான பணிகள்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

சர்வதேச தரத்தில் இந்த பயணிகள் முனையும் கட்டப்பட்ட வருகிறது சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்ற வருவதோடு இதற்கான சாலைகள் அமைக்கப்படும் பணிகள் மற்றும் ரன்வே அமைக்கப்படும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தெரிய வருகிறது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் இந்தியாவிற்கு அதிக விமானங்கள் இயக்கப்படும் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்.

இந்த வருடத்தின் இறுதிக்குள் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts