இந்திய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா!

டிச 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா நடைபெற்ற வருகிறது. தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த புத்தகத் திருவிழாவிற்காக பிரம்மாண்ட அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது.

தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் மற்றும் கிருஷ்ணா புத்தக நிலையம் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் .

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேவையான நன்னெறி கதைகள், அறிவியல், கலை, பண்பாடு, தமிழ் மொழி சார்ந்த புத்தகங்கள் என பல்வேறு ஆசிரியர்களின் புத்தகங்கள் இந்த திருவிழாவில் இடம் பெற்றுள்ளன .

திங்கள், செவ்வாய் ,புதன் என மூன்று நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவினை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடைபெற்று வருவதால் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த புத்தகத் திருவிழாவிற்கு வருகை தர முடியாத காரணத்தினால் இந்த புத்தகத் திருவிழாவினை நீட்டிக்க வேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுப்பதாக கிருஷ்ணா புத்தக நிலையத்தின் நிறுவனர் திரு. ஆனந்தன் தெரிவித்தார் .

Related Posts