சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் டாப் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வாய்ப்பு!

அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார் மே 24ஆம் தேதி ஆன இன்று சிங்கப்பூரில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தார்.

சிங்கப்பூரின் பிரபல நிறுவனமான செம்ப்கார்ப் ,தொமாசேக்,கேப்பிடா லேண்ட் ஆகிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்கவும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெறும் அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூரின் பிரபல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் வாய்ப்புகள் உள்ளன .

Related Posts