சிங்கப்பூர் செய்திகள்

தனது தொழிலாளியின் திருமணத்திற்காக சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாடு வந்த சிங்கப்பூர் முதலாளி!

சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் இருந்து சென்று பல்வேறு இளைஞர்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் . குறிப்பாக தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செய்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன் இவர் சிங்கப்பூரில் சிவில் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மே 28 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது .

தன்னுடைய திருமணத்திற்கு தனது முதலாளி வருகை தர வேண்டும் என்று எண்ணிய கலைவாணன் தனது முதலாளியான ஸ்டீபன் லீகுவான் விற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தனது நிறுவனத்தில் பணி புரியும் கலைவாணனின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று லீக்வான்யூ விமானம் மூலமாக கலைவாணனின் சொந்த ஊருக்கு வருகை தந்தார்.

கலைவாணன் ஆனந்தவல்லி தம்பதியரின் திருமணத்தில் கலந்து கொண்ட லீகுவான் மேலும் தமிழகத்தில் இது போன்ற பாரம்பரியம் சார்ந்த விடயங்களை நான் பார்ப்பது இதுவே முதன்முறை என்றும் இந்த பாரம்பரிய முறைகளை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல் பெருமையுடன் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார் .

சமீப காலங்களில் சிங்கப்பூர் முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமணத்திற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது .

Related Posts