சினிமா செய்திகள்

மாஸ்டர் திரை விமர்சனம்.

மாஸ்டர் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு வர வைக்க வேண்டுமென்றால் விஜய்யின் படத்தை ரிலீஸ் செய்தால் மட்டுமே முடியும் என்று கருதி திட்டமிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்த படம் தான் மாஸ்டர். இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி என்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக தியேட்டருக்கு படை எடுத்தனர். மாஸ்டர் மாற்றத்தை கொடுத்தாரா இல்லையா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

JD என்ற குடிகார வாத்தியாருக்கும் பவானி என்ற குடி பழக்கம் இல்லாத வில்லனுக்கும் நடக்கும் மோதலே இந்த மாஸ்டர். கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வரும் விஜய் ஒரு பிரச்சனையின் காரணமாக டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாஸ்டராக பணிபுரிய தொடங்குகிறார். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவர்களை தவறான விஷயத்துக்கு பயன்படுத்தி சம்பாதித்து வரும் ரவுடி கும்பலை வெளுத்து வாங்குகிறார். அந்த ரவுடி கும்பல்களிடமிருந்து அப்பாவி சிறுவர்களை காப்பாற்றி அவர்களை மீட்பது தான் கதை.

விஜய் JD கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் செய்யும் லூட்டிகள் ரசிக்கும் படி இருக்கும். அறிமுகம் காட்சியில் இருந்து படத்தின் இறுதிவரை விஜயின் எனர்ஜி குறையவே இல்லை. விஜய் படத்தில் என்ன எதிர்பார்த்து போவார்களோ அத்தனையும் இந்த படத்தில் இருக்கிறது. பாடல் காட்சிகளில் விஜயின் நடனம் அரங்கை அதிர செய்கிறது. சண்டைக்காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். விஜயின் நடிப்பு இந்தப் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

Related Posts