இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது .உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகங்களில் இதற்கான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன .
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் இந்திய மக்களுக்கு தேவையான அலுவலகப் பணிகள் மற்றும் வெளியுறவு துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய கலாச்சார நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரக அலுவலகத்தில் இந்திய தேசிய கொடியினை சிங்கப்பூர் இந்திய தூதரக உயரதிகாரி ஏற்றி ஜனாதிபதி உரையினை வாசிப்பார். இந்த நிகழ்வுக்கு சிங்கப்பூர் இந்திய தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.