சினிமா செய்திகள்

ரீ ரிலீஸ்னா இப்படி இருக்கணும் நம்மூரிலும் வெளிநாட்டிலும் கொண்டாட்டம் -கில்லி

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய் திரிஷா நடிப்பில் உருவாகிய இந்த படம் கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த திரைப்படம் .

மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஓக்கடு படத்தின் ரீமேக் ஆன படம்  கில்லி 50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படுகிறது .

படத்தின் பாடல்கள் பிரகாஷ்ராஜ் சொல்லும் ஹாய் செல்லம் வசனம், அதிரடி காட்சிகள் என படத்தில் எல்லாமே சூப்பர் ஹிட் தான் .

சூப்பர் ஹிட்டான கில்லி திரைப்படம் தற்போது 4கே டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரைக்கு வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. திரையரங்கிலும் படத்திற்கு அமோகமான புக்கிங் மற்றும் வரவேற்பு இருக்கிறது .இந்த நிலையில் வெளிநாட்டில் பிரான்சில் ரசிகர்கள் அமோகமாக இந்த திரைப்படத்தை கொண்டாடியுள்ளனர் .

Related Posts