பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ,மாமன்னன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .
தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த மலையாளத் திரைப்படம் தான் (ஆவேசம்) இப்படத்தை ஜீத்து மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த ரோமச்சன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
பகத் பாசில் நடிப்பில் தற்போது வெளிவந்த ஆவேசம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளிவந்த பத்து நாட்களில் ரூபாய் 100 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது .