சினிமா செய்திகள்

விஜய் டிவி குக் வித் கோமாளியில் இளம் நடிகை திவ்யா துரைசாமி?

குக் வித் கோமாளி ஷோ தொடங்குவதை இந்த வருடம் விஜய் டிவி பல மாதங்கள் தாமதம் செய்ததால் அடுத்த சீசன் வருமா இல்லையா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. நடுவராக இருந்த செப் வெங்கடேஷ் பட்டு வெளியேறிவிட்ட நிலையில் புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறக்கி உள்ளது விஜய் டிவி .

பிரபல யூடிபர் மற்றும் ஹோட்டல் ரிவிவரான இர்பான் குக் வித் கோமாளிக்கு வருவது உறுதியாகி இருக்கிறதாம் .மேலும் நடிகர் வி டிவி கணேஷ் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா போன்றவர்களும் போட்டியாளர்களாக வர இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளம் ஹீரோயின்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதால் நடிகை திவ்யா துரைசாமி உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது .

Related Posts